தமிழ் சினிமாவின் பெருமையை எடுத்து சென்றவர்கள்ர ஜினியும், ஷங்கரும்

135

தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் எடுத்து சென்றவர்களில் ரஜினியும், ஷங்கரும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் செய்தால் எப்படியிருக்கும் என்பது நீண்ட நாள் விருப்பம்.

அதற்கு பலனாக சிவாஜி, எந்திரன் என இரண்டு மெகா ஹிட் படங்கள் திரைக்கு வந்து அசத்தியது, தற்போது அதை தொடர்ந்து 2.0 படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது.

இப்படம் முதல் நாள் இந்தியாவில் மட்டுமே ரூ 100 கோடி வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் எப்படியும் ரூ 150 கோடி வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஒரு தமிழ் படம் இத்தகைய சாதனையை செய்தால் கண்டிப்பாக மொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

SHARE