தமிழ் சினிமாவில் வவுனியாவைச் சேர்ந்த மிதுனா..!

190

ஈழத்தின் பிரபல நடிகை மிதுனா. வவுனியாவைச் சேர்ந்த இவர் பல்வேறு பாடல்களிலும் குறும்படங்களில் நடித்து இலங்கையின் முன்னணி தமிழ் நடிகைகளில் ஒருவராக வலம்வருகின்றார்.

இந் நிலையில் ஓவியா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மிதுனா அறிமுகமாகவுள்ளார்.இத் திரைப்படத்தை இயக்குனர் கஜன் சண்முகநாதன் இயக்கவுள்ளார்.

தன்னை முறையாக பராமரிக்காமல் தனது மரணத்திற்கு காரணமான பெற்றோர்களை பழிவாங்கும் குழந்தையின் வாழ்க்கையை சொல்லப்போகும் திரைப்படம்தான் ஒவியா.

ஏற்கனவே இலங்கையில் இருந்து நடிகை பூஜா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தனக்கென ரசிகர்களை சம்பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE