தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளருக்கு புலனாய்வுத் துறை அச்சுறுத்தல்

342

 

தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளருக்கு புலனாய்வுத் துறை அச்சுறுத்தல்
unnamed (3)
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி வேட்பாளர் ஒருவருக்கு புலனாய்வுத் துறையினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் மன்னார் மாவட்ட இளம் வேட்பாளரான பெற்றிக்ஸ் ஜெனன் அவர்களின் வீட்டுக்குச் சென்ற புலனாய்வுத் துறை என தம்மை அடையாளப்படுத்தியோர் அவரது குடும்ப விபரம், தொழில், வெளிநாடுகளில் உள்ளோருடன் தொடர்பு இருக்கிறதா?, உறவினர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்களா என பல வினாக்களை கேட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து குறித்த வேட்பாளரிடம் கேட்ட போது, கடந்த புதன் கிழமை எனது வீட்டுக்கு வந்த புலனாய்வுத் துறையினர் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து எமது கட்சித் தலைமையிடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
SHARE