நேற்றை சந்திப்பு தொடர்பில் சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கையில்:-
01. வடக்கு – கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை உடனடியாக அவர்களிடம் கையளிக்க வேண்டும்.
02. பொதுமக்களின் காணிகளில் உள்ள இராணுவ
முகாம்கள் அகற்றப்படுவது தொடர்பில் அரசாங்கம் அக்கறைகொள்ள வேண்டும்.
03. மீள்குடியேற்றச் செயற்பாடுகள் இன்னமும் தாமதடைகின்றன. வலிகாமம், சம்பூர் பகுதி களில் மக்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும்.
04. யுத்தத்தின்போது வெளியேற்றப்பட்ட மக்களை யுத்தம் முடிவடைந்தவுடனும் மீள் குடியேற்றாது வைத்திருப்பது மோசமான செயற்பாடாகும். எனவே மீள் குடியேற்றம் தொடர்பில் உடனடி வேலைத் திட்டங்கள் அவசியம்.
05. வலிகாமம் சுன்னாகம் பகுதியில் தற்போது எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதால் 700க்கும் அதிகமான குடிநீர்க் கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
06. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை எடுக்க வேண்டும்.
07. வடக்கு – கிழக்கு மக்களின் பிரதான பிரச்சினைகள், மாணவர்களின் கல்விப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பது அவசியம்.
போன்ற விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக சம்பந்தன் அவர்கள் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.