தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த அரசாங்கமும் இதுவரை நிரந்தர தீர்வை வழங்கவில்லை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
போர் நடைபெற்ற காலத்திலும் போருக்கு பின்னரும் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீள்குடியேற்றப்பட்டவர்களின் பிரச்சினை, விதவைப் பெண்களது குடும்பங்களின் பிரச்சினை மற்றும் நிரந்த வருமானம் இல்லா காரணத்தினால் வடபகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
வடக்கில் கிராமங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கப்படாத காரணத்தினால், அங்கு வாழும் மக்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை கூட முழுமைப்படுத்தாது எடுக்கும் நடவடிக்கையாக இருந்தாலும் அதில் பிரயோசனம் இல்லை.
அரசியல் பேதங்களை புறந்தள்ளி விட்டு, மக்களுக்கு இருக்கும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைத்து தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வடக்கு மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.