தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமையும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம்.எமது மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை-இரா.சம்பந்தன்

202

 

தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமையும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம்.எமது மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. நிரந்தரமான ஒரு தீர்வுகிடைக்கும் வரையில் மக்கள் பொறுமையாக இருக்கும் அதே வேளையில், கொள்கையில்உறுதியுடன் இருக்கவேண்டும்’ எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)

அமரர் தர்மலிங்கத்தின் 31ம் ஆண்டு நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை(02)முற்பகல் தாவடியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

இதன் போதுகலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தர்மலிங்கத்தின் கருத்துக்களின் அடிப்படையிலேயே தந்தை செல்வா தமது கொள்கைகளைவகுத்தார். எமது அரசியல் பயணத்தில் ஏற்பட்ட ஒழுங்குமுறைகளை அனைவரும்அறியவேண்டும்.

அந்தவகையில் நாடு பிளவுபடாத ஒரு தீர்வு எமக்கு வேண்டும் என நாம்கோருகிறோம். இறைமை அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

தனித்துவமான முறையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சட்டம்,ஒழுங்கு, காணி, கல்வி, சுகாதாரம், மொழி, கலாசாரம், மீன்படி, விவசாயம், எனஅனைத்திலும் அதிகாரம் பகிரப்படவேண்டும்.

இம்முறையானது, உலகில் பல நாடுகளில்நடைமுறையில் தற்போது காணப்படுகிறது. அதன் அடிப்டையிலேயே நாம் கோருகிறோம். அதனைநாட்டின் பல தலைமைகள் ஏற்றுக்கொண்டுள்ளன. அவ்வாறு பகிரப்படும் அதிகாரமானதுஉச்சமாக இருக்கவேண்டும்.

இதில் நிறைவேற்று அதிகார உரித்து காணப்படவேண்டும்.தந்தை செல்வா, தமிழரசுக் கட்சியினை ஆரம்பித்துக் கொள்கையினை வகுத்து தமிழ்மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கேட்டார். அப்போது தந்தை செல்வாவுடன்இணைந்து பலர் செயற்பட்டனர். அதில் தர்மலிங்கமும் ஒருவர்.

காலப் போக்கில்தமிழரசுக் கட்சி மக்கள் மத்தியில் பூரண ஆதரவை பெற்றது. 1960ஆம் ஆண்டுதர்மலிங்கம் முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். இவர்அனைவரது மதிப்பைப்பெற்ற தலைவராக காணப்பட்டார்.

1970ஆண்டு தேர்தலின் பின்னர் அரசியல் அமைப்பு மாற்றப்பட்டு புதிய அசியல்சாசனம் உருவாக்க முயற்சிகள் செய்யப்பட்டபோது தமிழரசுக் கட்சி அதில் சார்பாகஇருந்தது. அதற்கான ஆதரவு கருத்துக்களை வழங்கினார் தர்மலிங்கம்.

ஆனால், அன்றும்கூட தமிழர் கருத்துக்கள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தது.அதனைத் தொடர்ந்து நாம் வெளியேறினோம். கொண்டுவரப்பட்ட புதிய அரசியல்சாசனத்தை நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுள்ளனர் என அரசு தெரிவித்தது.

இதனைமறுத்த தந்தை செல்வா இது தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு அரசியல்சாசனம் தெரிவித்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து தான்தனியாக போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.

தற்போது 1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பு நீக்கப்பட்டு புதியஅரசியல் அமைப்புக் கொண்டு வரப்பட வேண்டும் என அனைத்து மக்களும்விரும்புகிறார்கள்.

அன்றைய காலகட்டத்தில் தர்மலிங்கம் முன்வைத்த கருத்துக்களேதற்போது எமக்குத் தேவைப்படுகிறது.தர்மலிங்கம் போன்ற பல தலைவர்கள் தற்போது நம்முடன் இல்லை.

அதனடிப்படையில் பலபொறுப்புக்களை நாம் சுமக்கிறோம். நமது மக்கள் பொறுமையாக இருக்கவேண்டும்கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

 

ஐ.நா சபை தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும்! மூன் தெரிவித்ததாக சுமந்திரன்

மீள்குடியேற்றம், காணாமல்போனவர்கள் விடயம், அரசியல் கைதிகள் விடுதலை மற்றும்பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா சபை தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும்என செயலாளர் நாயகம் பான்கி மூன் உறுதியளித்துள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்புதெரிவித்துள்ளது.

இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர்நாயகம் பான்கி மூன் யாழ்.பொது நூலகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தகலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான சுமந்திரன் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி விடயத்தைகூறியுள்ளார்.

மேலும் சந்திப்பு தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

2009ம் ஆண்டுமே மாதம் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கி மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுஅப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டு ஒப்ப ந்தத்தைசெய்திருந்தார்.

அதில் பொறுப்புகூறல் போர்க்குறு;றங்கள், அரசியல் தீர்வு, மீள்குடியேற்றம் போன்ற பலவிடயங்களுக்கு அந்த அரசாங் கத்திடமிருந்தே இணக்கம் காணப்பட்டிருந்தது. ஆனால்அந்த விடயங்களை அரசாங்கம் நிறைவேற்றாத நிலையில் தொடர்ச்சியாக பல தீர் மானங்கள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவே ற்றப்பட்டது.

இந்நிலையில்ஆட்சிமாற்றம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் கடந்த அக்டோபர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில்தானும் இணங்கி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிருக்கின்றது.

எனவே நாங்கள்கேட்டிருக்கின்றோம். பிரதானமாக அந்த அக்டோபர் மாத தீர்மானத்தில் எழுத்துமற்றும் எண்ணத்தில் என்ன இருக்கின்றதோ அதனை நூற்றுக்கு நூறு வீதம்செயற்படுத்த வேண்டும். என மேலும் அவர் எமக்கு கூறியிருந்தார்.

அதாவது தாம் இங்கே வருகின்றபோதே மக்கள்தமக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்பதையும், உள்ளக விசாரணையில் தமக்குநம்பிக்கையில்லை எனவும்.

ஆகவே அந்த விடயங்களை தாம் உள்வாங்கியிருப்பதாக அவர்எமக்கு கூறியதுடன் அந்த விடயங்க ள் தொடர்பான பொறிமுறை ஒன்றுஉருவாக்கப்படுகின்ற போது அவை சரியாக செய்யப்படுவதற்கு ஐ.நா சபை தம து பங்களிப்பை வழங்கும். என்று.

இதேபோல் தாம் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை சந்தித்தபோது தமிழ் மக்களுடைய உடனடிபிரச்சினைகளான மீள்குடியேற் றம். அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனவர்கள்விடயம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் போன்றன தொடர்பாக சரியானதீர்வுகள் காணப்படவேண்டும். என்பதை தாம் அழுத்தி சொல்லியுள்ளதாகவும், இந்த விடயங்களில்சரியான தீர்வுகள் கிடைக்கப் பெறுவதற்கு ஐ.நா சபை தொடர்ந்தும் அழுத்தங்களைகொடுக்கும் எனவும், அதனை எமக்கு அவர் உறுதி மொழியாக தருவதாகவும் கூறியுள்ளதாகஅவர் மேலும் கூறினார்.

போர்க்குற்ற விசாரணை பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கவேண்டும்! மூன்

இலங்கையில் போர் காலப்பகுதியில் நடைபெற்ற போர்குற்றங்களுக்கான விசாரணை என்பதுமக்களால் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக் கொள்ள கூடியதாகஇருக்கவேண்டும். அவ்வாறான விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கவே தாம் முயற்சித்துக்கொண்டிருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியதாக வடமாகாண முதலமைச்சர்சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர்நாயகம் பான் கீ மூன் இன்றைய தினம் மாலை 1.30 மணியளவில் யாழ்.பொதுநூலகத்தில்வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்களை சந்தித்துகலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

மேலும் முதலமைச்சர் விடயம் தொடர்பாகதெரிவிக்கையில்,

நாங்கள் பேசும் போது 2009ம் ஆண்டுதாங்கள் வருகை தந்தபோது மனித உரிமைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பானவிடயங்கள் பேசப்பட்டிருந்த போதும்.போர் குற்ற விசாரணைக்கான பொறிமுறை ஒன்றுஉருவாக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதற்கு அவர் பதிலளிக்கையில், போர்குற்ற விசாரணைஎன்பது மக்களால் அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக் கொள்ள கூடியதாகஇருக்கவேண்டும். அப்போதே மக்களுக்கு நம்பிக்கை உண்டாகும்.

எனவே அவ்வாறான ஒருவிசாரணை பொறிமுறையினை உருவாக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. அந்த பொறிமுறை உருவாக்கப்பட்டதன் பின்னர் அதனை சரியாக நடைமுறைப்படுத்துவதற்கான உதவிகளை ஐ.நா நிச்சயமாகவழங்கும். என கூறியிருக்கின்றார்.

இதேபோல் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாகநாங்கள் சுட்டிக்காட்டியபோது 2009ம் ஆண்டு தாம் இலங்கை வந்தபோது அதனை நீக்குவதற்குநடவடிக்கை எடுக்குமாறு கேட்டதாகவும், இதுவரை காலமும் அந்த சட்டம் நீக்கப்படாமலிருப்பதானது பிழை எனவும் அதனை நீக்கவேண்டும். எனவும் தாம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைகேட்டுள்ளதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில்தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். எனவும் தாம் கேட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதேபோல் நல்லிணக்கத்திற்காக பெருமளவு பணம் செலவிட உள்ளதாகவும் அதற்குபல நாடுகள் நிதி வழங்க உள்ளதாகவும் அறிகிறோம். ஆனால் சிறைகளில் உள்ளவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை.காணாமல்போனவர்கள் விடயத்தில் உண்மைகள் கண்டறியப்படவில்லை. பெருமளவு படையினர்வடக்கில் நிலைகொண் டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்கிடக்கவில்லை. இவ்வாறான நிலையில் எப்படி நல்லிணக்கம் உண்டாக்க போகிறீர்கள்? எனதாம் கேள்வி எழுப்பியதாக முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

SHARE