தமிழ் மக்கள் பேரவைக்கு தனது ஆசிகளைத் தெரிவித்தார் மன்னார் ஆயர்

338

 

தமிழ் மக்கள் பேரவைக்கு தனது ஆசிகளைத் தெரிவித்தார் மன்னார் ஆயர்

10262220_993154657413206_9128382193637561168_n 12507215_993157454079593_1569991698303517375_n

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கும், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசெப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இன்று காலை 09.30 மணிக்கு மன்னார் ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம், அதன் செயற்பாடுகள் குறித்து ஆயர் அவர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகளிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்த அதேவேளை, தமிழ் மக்கள் பேரவைக்கு தனது வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கலாநிதி க.சர்வேஸ்வரன், மன்னார் நகரசபை முன்னாள் பிரதித் தலைவர் ஜேம்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

SHARE