தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு நேற்று பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிப்பு

240

 

தமிழ் மக்கள் பேரவை ஆதரவாளர்கள்-கனடா's photo.

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு நேற்று பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிப்பு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நேற்று வெள் ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக பிரித்தானிய அரசு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் கையளிக்கப் பட்டது.

பேரவையின் செயற்பாட்டுக் குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் தலைமையில் அரசியல் உப குழு இணைப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி புவிதரன் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினர்களான சிரேஸ்ட சட்டத்தரணி இரத்தினவேல், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சட்டத்தரணி விஜயகுமார் மற்றும் சட்டத்தரணி காண்டிபன் ஆகிய ஐவர் கொண்ட குழு காலை 11.00 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகார பொறுப்பாளர் போல்கொட் விரியிடமும் பின்னர் மதியம் 1.15 மணியளவில் பிரித்தானிய தூதுவராலய அரசியல் பொறுப்பாளர் டானியல் பெயின்டர் அவர்களிடமும் நேரடியாககையளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும் இவ்அரசியல் இராஜதந்திரிகளிற்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன் போது பேரவை உறுப்பினர்கள் இதுவரை காலமாக தமிழ்மக்கள் எதை தமக்கு தீர்வாக எதிர்பார்கிறார்கள்என்றஒருதீர்க்கமானதிட்டம்உருவாக்கஎவரும்முன்வராததுமட்டும் இன்றி எவரும்
அவர்களைக் கேட்காததாலும், தமிழ்மக்களின் இழப்பை எவரும் சரியாக கண்டுகொள்ளாததாலும், தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுவரும் வேளையில், இதுதான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு என மக்கள் கலந்துரையாடல் மூலம் ஒருதிட்டம் உருவாக்கி அதனை சர்வதேசத்திடம் சமர்ப்பித்து, இத்தீர்வுத்திட்டம் எமக்கு முழுமையாக பெற்றுத்தரும் சந்தர்ப்பத்தில் மட்டும்தான் தமிழ் மக்கள் தமது சுயகொளரவத்துடனும், சம உரிமையுடனும் வாழமுடியும் எனபதை மிகவும் தெளிவாக எடுத்துக் கூறினர்.

SHARE