தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி , மஞ்சுவாரியர்

172

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த தனுஷ் பட நடிகை

விஜய்சேதுபதி இந்த ஆண்டு முதல்முறையாக மார்க்கோனி மத்தாய் என்ற படம் மூலமாக மலையாளத்தில் அடியெடுத்து வைத்தார். அதேபோல் மலையாள நடிகை மஞ்சுவாரியர் அசுரன் படம் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தார். இப்போது இவர்கள் இருவரும் இணைந்து தமிழ், மலையாளம் மொழிகளிலும் உருவாகும் படத்தில் நடிக்கிறார்கள்.
விஜய் சேதுபதி - மஞ்சு வாரியர்இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் பிஜூமேனன். ஆர்.ஜே.ஷான் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே மஞ்சு வாரியர் நடித்த சாய்ராபானு என்ற படத்தின் கதாசிரியர்களில் ஒருவராக பணியாற்றியவர். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மஞ்சு வாரியர் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
SHARE