தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி கட்டு, பாரதி கண்ணம்மா, தேசியகொடி போன்ற சமூக அக்கறை கொண்ட படங்களையும், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி, பொக்கிசம் உள்ளிட்ட குடும்ப உறவுகளை தூக்கி பிடிக்கும் படங்களையும் இயக்கியவர் சேரன். யுத்தம்செய், ராமன் தேடிய சீதை, பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக சினிமா டூ ஹோம் (சி டூ எச்3) எனும் நிறுவனம் துவங்கி, படங்களை தியேட்டர்களில் வெளியிடாமல் நல்ல தரமான பிரிண்ட் உடன் டிவிடிகள் மூலம் வெளியிடும் புதிய முறையை அறிமுகப்படுத்தினார். அதில் தான் இயக்கி தயாரித்த ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை எனும் படத்தை கடந்த 2015ம் ஆண்டு வெளியிட்டார். படம் நல்ல விமர்சனத்தை பெற்றாலும், வியாபார ரீதியாக பெரியாக போகவில்லை.
அதன்பின்பு படம் இயக்காமல் வெளிப்படங்களில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் படம் இயக்க உள்ளார். மைனா படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை வைத்து, தனக்கே உரிய பாணியில் படம் எடுக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 13ம் தேதி பூஜையுடன் துவங்க உள்ளது. இதனை தம்பி ராமையா மகன் உமாபதிக்காக எழுதி, இயக்கி மற்றும் இசை அமைக்கும் மணியார் குடும்பம் படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்சனில் வெளிப்படுத்தினார்.
அந்ந விழாவில் சேரன் பேசும்போது, “சில நாள்களாகத் உமாபதியையும் கவனிச்சுட்டு இருக்கேன். ஜூலை 13-ம் தேதி தொடக்கவிருக்கிற என்னோட புதுப்படத்தில் கதாநாயகனாக உமாபதிதான் நடிக்கிறார். அதை இந்த இடத்தில் அறிவிக்கிறது மிகச்சரியா இருக்கும்’’என்றார்.
கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த படத்தில் உமாபதி ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார். படத்தில் தம்பி ராமையா, உமாபதி, சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
மீண்டும் ஒரு தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப்-க்காக ரசிகர்கள் வெயிட்டிங் சேரன்..