தம்புள்ளை பகுதியில் நேற்நு இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மகள் , மகன் ஆகியோர் பலியான நிலையில் அவர்களின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
தம்புள்ள-கந்தலாம வீதியில் குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
வேன் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் சிக்கியே 20 வயதுடைய மகளும் 5 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் இறந்த இருவர்களினதும் பெற்றோர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.