தயாரிப்பாளரிடம் தங்கக்காசுகளை பெற்ற அசுரன்’ பட குழுவினர்

169

அசுரன் படக்குழுவினருக்கு தாணு தங்கக்காசு பரிசு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அசுரன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை தாணு தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து காலை சிறப்புக் காட்சிகளும் மற்றும் பல்வேறு ஊர்களில் திரையரங்குகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அசுரன் படக்குழுஇதனால், தயாரிப்பாளர் தாணு பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். இதனை தொடர்ந்து படத்தின் உதவி இயக்குநர்களுக்கும், உதவி ஒளிப்பதிவாளர்களுக்கும் பரிசுகள் வழங்கியுள்ளார். உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு தங்க காசுகள் வழங்கியுள்ளார். மேலும், உதவி இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். இதனால் ‘அசுரன்’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
SHARE