தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொல்லும் தானா சேர்ந்த வசூல் நிலவரம்!

185

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 12 ல் வெளியானது. இப்படத்தின் வெற்றி விழாவை நேற்று படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் கொண்டாடியது.

இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா படத்திற்கு பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல ஓப்பனிங் இருந்தது. கடந்த நான்கு நாட்களாக பட விளம்பரத்துக்காக ஆந்திரா சென்றிருந்தோம். சூர்யா, விக்னேஷ் சிவன் உடனிருந்தார்கள்.

இங்கு மட்டுமல்ல ஆந்திராவில் நல்ல கொண்டாட்டம். வெளிநாடுகள், கேரளா, கர்நாடகா என எல்லா இடத்திலும் நல்ல நிலை தான். படத்தை வெற்றி பெற செய்த எல்லோருக்கும் நன்றி என அவர் கூறினார்.

SHARE