ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டதை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா விமர்சித்துள்ளார்.
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நிர்வாகத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டு, தாம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதில் ரத்நாயக்கவின் குறிப்பிடத்தக்க ஈடுபாட்டை சரத் பொன்சேகா வெளிப்படுத்தியுள்ளார்.
ரத்நாயக்கவை அரவணைப்பதன் மூலம், ஐக்கிய மக்கள் சக்தி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன்; தன்னை இணைத்துக் கொள்ளும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.