தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று

167

தரம் ஐந்து புல‍ைமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இந் நிலையில் இன்று வெளியாவுள்ள புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை www.doenest.lk என்ற இணையத்தளத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

SHARE