தரம் 5 மற்றும் 6க்கான பாட விதானத்தில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

293

தரம் 5 மற்றும் 6க்கான பாட விதானத்தில் மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தரம் 5 மற்றும் 6க்கான பாட விதானங்களில் காணப்படும் சிக்கல் தன்மைகளினால் மாணவர்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மாணவர்களினால் இலகுவில் கிரகிக்கக் கூடிய வகையில் பாட விதானம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் எதிர்நோக்கி வரும் அழுத்தங்கள் தொடர்பில் அடிக்கடி பெற்றோர் முறைப்பாடு செய்கின்றனர்.

எனவே, மாணவர்களினால் சுலபமாக கிரகிக்கக் கூடிய வகையில் பாட விதானத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, பாட விதானத்தில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அல்லது கல்வி அமைச்சு எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

SHARE