கடந்த ஆகஸ்ட்,23 ம் திகதி இடம்பெற்ற, தரம் 5 மாணவர்களின் பரீ்ட்சை வினாத்தாள்களின் திருத்தம் எதிர்வரும் செப்டெம்பர் 9ம் திகதி முதல் 14ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
38 பாடசாலைகளில் இப்பரீட்சை திருத்தம் இடம்பெற இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில்,க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களின் முதற்கட்ட திருத்தம், செப்டம்பர் 12 முதல் 25 வரை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 23 பாடசாலைகள் பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 8 பாடசாலைகள் முழுமையாகவும், 15 பாடசாலைகள் பகுதி பகுதியாகவும் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
செப்டெம்பர் 9திகதியுடன் உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.