தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் முன்னேறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி Dunedin-ல் நடந்தது.
இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 241 பந்துகளுக்கு 130 ஓட்டங்கள் (18 பவுண்டரிகள்) எடுத்தார்.
இதன்மூலம் ஜோ ரூட் மற்றும் விராட் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி 869 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தினை கைப்பற்றியுள்ளார்.
இதில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 936 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்திலும், ஜோ ரூட் 848 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும், விராட் கோஹ்லி 847 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும், டேவிட் வோர்னர் 794 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.