பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தோமஸ், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது.
இதன்படி இந்த திரைப்படம் சென்னையில் மட்டும் சுமார் 2.27 கோடி வசூலித்துள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஹைதராபாத்தில் 12.05 இலட்சம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.