தர்பூசணி சாறுடன் லெமன் சேர்த்து குடியுங்கள்: ஒரு அற்புதம் உள்ளது

186

தர்பூசணி பழத்தில் விட்டமின்கள், நீர்ச்சத்து, தாதுக்கள், கார்போஹைட்ரேட், கலோரிகள் மற்றும் ஃபைபர் ஆகியவை ஏராளமாக நிறைந்துள்ளது.

இந்த சத்துக்கள் புற்றுநோய் மற்றும் பக்கவாதம் போன்ற தீவிர நோய்கள் வராமல் தடுக்கிறது என்பது தெரியுமா?

தேவையான பொருட்கள்
  • தர்பூசணி ஜூஸ் – 1 டம்ளர்
  • லெமன் ஜூஸ் – 1 டம்ளர்
செய்முறை

தர்பூசணி ஜூஸ் மற்றும் லெமன் ஜூஸ் ஆகிய இரண்டையும் நன்றாக கலந்து, ஒருநாள் விட்டு ஒருநாள் என்று காலை உணவிற்கு முன் குடித்து வர வேண்டும்.

நன்மைகள்
  • தர்பூசணி பழத்தில் உள்ள லைகோபீன் என்ஜைம் மூளையில் ரத்தம் கட்டுவதை தடுத்து, ரத்தோட்டத்தை அதிகரித்து, ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, பக்கவாதம் நம்மை அண்டாமல் தடுக்கிறது.
  • லெமன் ஜூஸில் உள்ள விட்டமின் C மற்றும் தர்பூசணியில் உள்ள லைகோபீன், நம் உடம்பில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, கேன்சர் வராமல் தடுக்கிறது.
குறிப்பு

அன்றாடம் கொழுப்பு உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதுடன், உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

மேலும் ரெட் மாமிசம், குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

SHARE