தற்கொலை அங்கி குறித்து ஜீ.எல். பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை? பிரதமர் கேள்வி

250
download
வடக்கில் வீடொன்றில் இருந்து நேற்று மீட்கப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அங்கி மற்றும் ஆயுதங்கள் குறித்து ஜீ.எல். பீரிஸ் ஏற்கனவே அறிந்திருந்தால், முன்னதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த தற்கொலை அங்கி உட்பட ஆயுதங்கள் கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்திற்கு கொண்டு வரப்படவிருந்ததாக ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.

இந்த தகவல்களை அறிந்திருந்தும் ஏன் அவர் அதனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திறைசேரியின் புதிய கட்டடத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஜீ.எல். பீரிஸ் எனது நண்பராக இருந்தாலும் தற்போது அவர் நெப்போலியனின் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

யுத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட தங்கத்திற்கு என்ன ஆனது என்பது குறித்தும் அவர் பேச வேண்டும்.

வடக்கில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் ஆயுதங்கள் குறித்து எனக்கும், ஜனாதிபதிக்கும் தெளிவுப்படுத்தப்பட்டது. இரசாயன பகுப்பாய்வாளரும் இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

யுத்தங்கள் நடைபெற்ற நாடுகளில் இப்படியான பொருட்களை யுத்தத்திற்கு பின்னர் கண்டுபிடிக்க முடியும். எவ்வாறாயினும் இது குறித்து விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

SHARE