தற்கொலை அங்கி மீட்பு! வடக்கில் இராணுவக் குறைப்புக்கு தடையல்ல – பாதுகாப்பு செயலாளர்

260
தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை வடக்கில் இராணுவத்தை குறைப்பதற்கு தடையாக அமையாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை, வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்கும் நடவடிக்கைகளை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்து பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையானது வடக்கில் இராணுவத்தை குறைக்கும் செயற்பாட்டுக்கு தடையாக அமையாது.

இந்த செயற்பாட்டை இராணுவ மயமாக்கலை அகற்றுவது என்று கூறுகூது சரியான வார்த்தையாக அமையாது.

உண்மையில் வடக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கையை தேவைக்கு ஏற்ற வகையில் பேணுவதே அராசங்கத்தின் நோக்கமாகும்.

சரியான இடத்தில் சரியான எண்ணிக்கையில் படையினரை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

foriace11.01

SHARE