தற்கொலை செய்து கொண்ட மொடல் அழகி

195
வங்கதேசத்தைச் சேர்ந்த மொடல் அழகி தனது கணவருடன் வீடியோ காலில் இருக்கும் போதே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியை சேர்ந்தவர் ரிசிலா பின்டே வாசர்(22). இவர் 2012 ஆம் ஆண்டிலிருந்தே மொடலாக இருந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது. அதுமட்டுமின்றி இவர் பலகழைக்கழகத்தில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தனது கணவருடன் கடந்த திங்கட்கிழமை வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ கால் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் என்ன வாக்குவாதம் நடந்த்து என்பதைப் பற்றி தெரியவில்லை.

ஆனால் ரிசிலா வீடியோ காலில் இருக்கும் போதே, அவர் கணவர் கண் முன்னே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடனடியாக அவர் டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ரிசிலாவின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்தே கசந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருக்க கூடும் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

SHARE