நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி இணையும் படம் தல60. இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில் தினமும் படத்தில் நடிக்கவுள்ளவர்கள் பற்றி செய்திகள் பரவுகின்றன.பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என சமீபத்தில் செய்தி பரவியது. இது உண்மையா என்பது பற்றி படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
அஜய் தேவ்கன் போனி கபூர் தயாரிப்பில் மைதான் என்ற ஹிந்தி படத்தில் நடிக்கிறார். அதை தவறாக அஜித் படத்தில் நடிக்கிறார் என செய்தி பரப்பியுள்ளனர். அதில் உண்மையில்லை. இன்னும் அஜித்-வினோத் கூட்டணி தவிர வேறு எதுவும் முடிவாகவில்லை என கூறியுள்ளனர்.