தலயுடன் கூட்டணி அமைத்த இயக்குனர் விக்னேஷ் சிவன்- அடுத்த Project, வைரலாகும் போட்டோ

102

 

சிம்புவை வைத்து போடா போடி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் விக்னேஷ் சிவன்.

அதன்பிறகு தொடர்ந்து படங்கள் இயக்கி வந்தவர் நானும் ரவுடிதான் படம் இயக்கும் போது நயன்தாராவுடன் காதல் ஏற்பட திருமணமும் செய்துகொண்டார்.

அதன்பின் நயன்தாராவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இயக்கினார், அதில் சமந்தாவும் இன்னொரு நாயகியாக நடித்தார்.

இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்க இருந்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் அப்படம் அப்படியே டிராப் ஆக இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கிறார்.

புதிய போட்டோ
டிராப் ஆன பட தகவலுக்கு பிறகு விக்னேஷ் சிவன் இதுவரை எந்த ஒரு புதிய பட அறிவிப்பையும் வெளியிட்வில்லை.

இந்த நிலையில் தான் கிரிக்கெட் உலகின் தல எம்.எஸ்.தோனியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஒரு விளம்பரத்திற்காக விக்னேஷ் சிவன் தோனியை இயக்கி இருக்கிறாராம். தான் கடவுளாக கருதும் ஒருவரை இயக்கிய வாய்ப்பு கிடைத்தது தன் வாழ்நாளில் மறக்க முடியாது என நெகிழ்ச்சி உடன் கூறி உள்ளார்.

SHARE