தலவாக்கலை நகரில் காணப்படும் கடைத் தொகுதிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிப்புரியும் மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கான (நாட்டாமி) கூலியை அதிகரிக்க கோரி 06.04.2016 இன்று காலை 9.30 மணியளவில் சுமார் 30ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டமானது தலவாக்கலை வர்த்தக நிலையங்களில் தமக்கு வழங்கப்படும் பொதி மூட்டைகளுக்கான கூலியை 10 ரூபாவாக அதிகரிக்கும் படி வழியுறுத்தி நடத்தப்பட்டது. 06.04.2016 அன்று இந்த ஆர்ப்பாட்டம் தலவாக்கலை மத்தியின் சுற்று வட்டத்தில் அருகில் இடம்பெற்றது.
அனைத்து பொதி சுமக்கும் ஊழியர்கள் அணைவரும் தனது பணியை பகிஷ்கரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)