தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் 32 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டம் கையளிப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடாக மலையக மக்களுக்கு 5 வருட வேலைத்திட்டத்தின் கீழ் திட்டமிட்டு செயல்படும் அபிவிருத்தி பணிகளும் பெற்றுக்கொடுக்கும் உரிமைகளையும் தடுக்க ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மாத்திரமே உரிமை உண்டு. வேறு எவருக்கும் உரிமை இல்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் 15.01.2016 அன்று அட்டன் டன்பார் மைதானத்தில் 2016ம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர்..
மலையக மக்களுக்கு 2015 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பத்தாண்டு வேலைத்திட்டம் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வேண்டிக்கொண்டதற்கு இணங்க ஐந்தாண்டு வேலைத்திட்டமாக முன்னேடுக்கப்படவுள்ளது.
இதில் கல்வி, காணி உரிமை, வீட்டு உரிமை போன்ற அபிவிருத்தி பணிகள் துரித கதியில் முன்னெடுக்கபடவுள்ளது. இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தயாரான நிலையில் இருக்கின்றார்கள்.
எனவே தோட்ட தொழிலாளர்கள் எவருடைய பசப்பு பேச்சுகளுக்கும் செவிகொடுக்காது ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியை காணும் வழியினை அடைய வேண்டும் என்பதை இத் தை பொங்கல் தினத்தில் சவாலாக கொண்டு செயல்படுவோம் என்றார்.