தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் பெண்ணின் மரணம் திட்டமிட்ட கொலை – சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை சமர்ப்பிப்பு

254

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட பிரிவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 65 வயது மதிக்கதக்க பெண்ணின் மரணம் திட்டமிட்ட கொலை என நுவரெலியா மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தலவாக்கலை குற்றதடுப்பு பொலிஸார் 17.03.2016 அன்று தெரிவித்தனர்.

கடந்த மாதம் 24ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு இழக்காகி கடந்த (14.03.2016) அன்று உயிரிழந்த இப் பெண் தொடர்பான வழக்கு தலவாக்கலை பொலிஸாரால் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்தேக நபராக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை சம்பவம் நடந்த இடத்தினை பார்வையிடுவதற்காக 17.03.2016 அன்று காலை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் நீதவான் ருவான் த சில்வா ஸ்லத்திற்கு வருகை தந்து சம்மந்தப்பட்ட குடும்பத்தாருடன் விசாரணைகளை மேற்கொண்டுளளார்.

இதன்போது இம்மாதம் 29ம் திகதி சாட்சிகள் மூவருடன் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

55e7c564-f250-4746-8d05-90e915730deb 90bfa008-342a-4e11-a4c9-070e5e379307 e4ab7071-9e9f-428e-97a4-e726a1b5af36

(க.கிஷாந்தன்)

SHARE