தலைமுடி உதிர்வது தொடர்பில் கவலையா?

96

தலைமுடி உதிர்வுக்கெதிதாக மாத்திரைகள் முதல் ஊசி வரையில் பல சிகிச்சை முறைகள் நடமுறையிலுள்ளன.

இவ்வாறிருக்கையில் தற்போது தலைமுடி வளர்ச்சியை தூண்டும் புதிய முறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆம், செயற்கையாக தொகுக்கப்பட்ட சந்தண நறுமணமூட்டி தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நாசிப் பகுதியிலேயே மணம் வாங்கிக் கலங்கள் இருப்பதாக நாம் அறிந்துள்ளோம்.

ஆனால் உண்மையில் உடலின் பல பகுதிகளில் இம் மணம் வாங்கிக் கலங்கள் காணப்படுகின்றன.

உதாரணமாக தோலில் காணப்படும் OR2AT4 வாங்கிகள்.

இவ்வகை வாங்கிகளே தோலில் காயம் ஏற்படும் போது அக் காயங்களை சீர்செய்ய உதவுகின்றன.

இதனைத் தொடர்ந்து தலையில் இவ் வாங்கிகளை செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவருவதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்ட முடியுமா என்ற ஆய்வில் ஜக்கிய இராச்சிய விஞ்ஞானிகள் களமிறங்கியிருந்தனர்.

இவ் ஆய்வுக்கென தேர்வு செய்யப்பட்டோர் 6 நாட்களுக்குத் தொடர்ச்சியாக தெகுக்கப்பட்ட சந்தன நறுமணமாக்கிக்கு வெளிக்காட்டப்பட்டிருந்தனர்.

இதன்போது முடிவளர்ச்சியைத் தூண்டும் சுரப்பானது 25 – 30 சதவீதம் அதிகமாகச் சுரக்கப்படுவது அவதானிக்கப்பட்டிருந்தது.

எனவே தொகுக்கப்பட்ட சந்தன நறுமணமூட்டியை தலைப்பகுதியில் பிரயோகிப்பதன் மூலம் முடி வளர்ச்சியை மறுபடியும் பழையநிலைக்கு கொண்டுவர முடியுமென ஆய்வாளர்கள் நம்பிக்கை தெருவிக்கின்றனர்.

SHARE