
இன்றைய கால கட்டத்தில் தலைமுடி உதிருதல் மற்றும் இளம் வயதிலே நரை முடி பிரச்சனை ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ளது.
வெயிற்காலங்களிலும் மழைக்காலங்களிலும் கூந்தல் வரண்டுப்போய் முடி உதிர்வினை அதிகமாகின்றது.
இதனை தடுக்க வீட்டிலேயே சிறந்த வழிமுறைகளை கையாளுவோம்.
முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானதாகும் அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது.
அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.
வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.
நெல்லிக்காய் சாறு முடியின் வலிமை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடிய தன்மை கொண்டவை. அதனால் வாரம் இருமுறை நெல்லிக்காயை அரைத்து அதன் சாற்றை எடுத்து முடிக்கு நன்றாக மசாஜ் செய்வது நல்லது.
வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும்.
இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும், செம்பட்டை முடியும் நிறம் மாறும்.
தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும், தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள், இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் முற்றிலும் முடி கொட்டுவது நின்றுவிடும்.
கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு முடி உதிர்வதை தடுக்கும்.
கருநீலத் திராட்சையின் தோலை நீக்கி உலரவைத்து, பொடித்துக்கொள்ளவும். இதனுடன் வெந்தயத்தூள், கடலை மாவைக் கலந்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் தூசுக்கள் நீங்கி, கூந்தல் கருமையாக இயற்கையாகவே மாறும்.