ஒவ்வொருவருக்கும் தூங்குவதற்கு மிக முக்கியமாக தேவைப்படுவது தலையணை மட்டும் தான். தலையணை இருந்தால் வெறும் தரையில் கூட படுத்து விடுவார்கள் சிலர். சிலருக்கு தலையணை இல்லாமல் தூக்கமே வராது. சிலர் காலுக்கு ஒன்று தலைக்கு ஒன்று என வைத்து கொண்டுதான் தூங்குவார்கள். சிலர் தலையணையை கட்டிபிடித்த படி தூங்குவார்கள். ஆனால் தலையணை இல்லாமல் தூங்கினால் சில நன்மைகளை நமக்கு பெற கிடைக்கும். அதை இப்போது பார்க்கலாம்.
.

தலையணை இல்லாமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்:-
- தலையணை பயன்படுத்தாமல் தூங்கினால் தண்டுவடம் அதன் இயல்பு நிலையிலே இருக்கும். உயரமான தலையணை பயன்படுத்தினால் தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்படும்.
- தலையணை இல்லாமல் தூங்கினால் தோள்பட்டை, கழுத்து வலி போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.
- தலையணை இல்லாமல் தூங்கினால் உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும்.
- தலையணை இல்லாமல் தூங்கினால் முகத்தில் சுருக்கங்கள் உருவாகாது.
- நேராக படுத்து தூங்குபவர்கள் மெல்லிய தலையணையை பயன்படுத்தினால் கழுத்து வலி, தோள்பட்டை வலி உண்டாகமல் பாதுகாக்க முடியும்.
- ஒரு பக்கமாக சாய்ந்து படுப்பவர்கள் அடர்த்தியான தலையணையை தோளுக்கும் காதுக்கும் இடையே வைத்து தூங்கினால் உடலை சமநிலையில் வைத்திருக்க முடியும்.
- குப்பறபடுத்து தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் தட்டையான தலையணைகளை பயன்படுத்துவது சிறந்தது. இதனால் முதுகு வலி, இடுப்பு வலி உண்டாகாமல் தடுக்கலாம்.