ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படம் தான் தலைவர் 171. சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது. முதற்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி இப்படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க போகிறார் என தெரிவித்திருந்தனர்.
நிராகரித்த நடிகர்
ஆனால், தற்போது கூறப்படுவது என்னவென்றால் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சி செய்துள்ளார். ஆனால், தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி நோ சொல்லிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு சம்பளம் காரணமா அல்லது இனி மேல் எந்த படத்திலும் வில்லனாக நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி எடுத்துள்ள முடிவு காரணமா என தெரியவில்லை என்கின்றனர்.