தமிழ் சினிமாவை பொறுத்தவரை தலதளபதி இருவருமே மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்கள். இவர்கள் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
அந்த வகையில் சினிமாவிற்குள்ளும் பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இவருக்கு ரசிகர்களாக இருப்பார்கள்.இந்நிலையில் நட்புனா என்னாணு தெரியுமா தயாரிப்பாளர் ரவீந்திரன், ஒரு பேட்டியில் ‘நான் வெறித்தனமான தளபதி ரசிகர், அவருடைய பக்தன் நான்.
ஆனால், சினிமாவிற்குள் வந்த பிறகு தல அஜித்தை கையெடுத்து கும்பிடும் நிலைக்கு வந்துள்ளேன், அவரை மதித்தால் தான் நான் மற்ற நடிகருக்கு ரசிகராக இருக்க முடியும்’ என கூறியுள்ளார்.