நடிகர் சாந்தனு சினிமாவில் சாதிக்க அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது அதிரூபன் இயக்கத்தில் இவர் முப்பரிமாணம் படத்தில் நடித்துள்ளார்.
இதில் ஸ்ருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, அப்புகுட்டி ஆகியோர் நடித்துள்ளனர். அடுத்தமாதம் இப்படம் வெளியாவுள்ளது. பட பிரமோஷனுக்காக 30 நொடி EMOJI யும் செய்து வருகின்றனர்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ஒரு சண்டைகாட்சி ஒன்று உள்ளது. சாந்தனு இதற்கு முன் அவரது படங்களில் இல்லாதளவுக்கு மிகவும் ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சியில் நடித்துள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற இதற்கு காரணம் தல அஜித்தின் உத்வேகம் தான் என கூறியுள்ளார் சாந்தனு.