தல ரசிகர்கள் இன்று மீண்டும் தெறிக்க விடுவார்களா?

473

அஜீத்தின் வேதாளம் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் கடந்த வாரம் வெளியானது.

இந்த இரண்டுமே சமூக வலைதளங்கள் அனைத்திலும் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் பாடல் டீசர் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை இப்படத்தின் படத்தொகுப்பாளர் ரூபன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

தெறிக்க விடலாமா டீசருக்கு பின்னர் தரலோக்கல் பாடல் டீசரை கேட்டு மகிழுங்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் பெரும் மகிழ்ச்சியில் உள்ள அஜீத் ரசிகர்கள் மீண்டும் உலக சாதனை செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE