விஜய்யின் படங்களில் அவரது பாடல்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். அப்படி ஹிட் பாடல்களில் ஒன்று தாம்தக்க தையதக்க கூத்து, இந்த பாடலில் தளபதி மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடனம் ஆடி இருப்பார்கள்.
ராகவா லாரன்ஸ் முன் பிரபுதேவா அவர்கள் தான் தளபதியுடன் நடனம் ஆட இருந்தாராம், அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படக்குழு லாரன்ஸை அணுகியுள்ளனர்.
அப்போது அவர் சிரஞ்சீவி படத்தில் பிஸியாக இருந்துள்ளார். பின் இப்பட இயக்குனர் சிரஞ்சீயை அணுகி கேட்க, அவர் ஒப்புக் கொள்ளவே லாரன்ஸ் அவர்கள் திருமலை படத்தில் நடனம் ஆடியிருக்கிறார், அப்பாடலும் படு ஹிட் அடித்துள்ளது.