விஜய் நடித்த சில படங்களில் நெகடிவ் ரோலில் நடித்திருப்பவர் தீனா. தெறி படத்தில் குழந்தைகளை பிச்சை எடுக்கவைத்ததற்காக விஜய்யிடம் அடி வாங்குவாரே அவரே தான்.
அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் விஜய் செய்த உதவிகள் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். “அவரை பற்றி பேச ஆரம்பித்தால் நாள் முழுக்க பேசுவேன். அந்த அளவுக்கு செய்துள்ளார்.”
“ஜிம் பாய்ஸ் 700 பேர் இருக்கோம். நாங்க 20 வருடமா சங்கம் அமைச்சு போய்கிட்டிருக்கு. அந்த 700 பேரை தற்போது பெப்சி (FEFSI) உடன் இணைக்க பேசியது விஜய் அண்ணன் தான். ஆர்.கே.செல்வமணி சார் கிட்ட பேசி எங்களையும் பெப்சி சங்கத்தில் இணைக்கும்படி கேட்டார். எங்களுக்கு accident ஆனாலோ இல்லை அடிபட்டாலோ கேட்பதற்கு கூட ஆள் கிடையாது. அப்படி அனாதைகளாக இருந்த எங்களை பெப்சியில் இணைக்க உதவியது அண்ணன் தான்” என தீனா உருக்கமாக பேசியுள்ளார்.