லியோ படத்தை முடித்த கையோடு தனது அடுத்த படத்தில் நடிக்க துவங்கிவிட்டார் தளபதி விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் துவங்கியது.
இந்த படப்பிடிப்பில் பிரஷாந்த், பிரபு தேவா, விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதற்கட்ட படப்பிடிலேயே பாடல் காட்சியை எடுத்துள்ளார் வெங்கட் பிரபு. இந்த பாடல் காட்சியை பிரபு தேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் தான் வடிவமைத்துள்ளார்.
பாடல் காட்சி நிறைவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் அரவிந்த் சாமி நடிப்பதாக இருந்தது.
மைக் மோகன் சம்பளம்
ஆனால், அவர் அந்த ரோலில் இருந்து வெளியேற தற்போது அவருக்கு பதிலாக நடிகர் மைக் மோகன் கமிட்டாகியுள்ளார். பல வருடங்கள் கழித்து மைக் மோகனை திரையில் காண அவருடைய ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், தளபதி 68 படத்தில் வில்லனாக நடிக்க மைக் மோகன் ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். இதுவரை மைக் மோகன் எந்த படத்திற்கு இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.