தளவர்வான சுங்கச் சட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய சுங்கச் சட்டத்தின் உள்ளடக்கங்கள் வெளிநாட்டு சுங்கச் சட்டங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது எனவும் இது இலங்கைக்கு பொருத்தமுடையத்தல்ல எனவும் சங்கத்தின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சுங்கச் சட்டம் உத்தேச திருத்தச் சட்டம் என்பனவற்றை தெளிவாக ஆராய்ந்து எதிர்வரும் மூன்று வாரங்களில் நிதி அமைச்சின் அதிகாரிகள் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
உத்தேச சுங்கச் சட்டம் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு சாதகமான வகையில் அமைந்துள்ளதாக சில தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.