தள்ளிப்போன `100′ படத்தின் ரிலீஸ் திகதி

103

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா – ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் நாளை ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக படத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சாம் ஆண்டன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

100 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. எங்களது இந்த படத்தை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியாததற்காக வருந்துகிறேன். இதில் என் தவறு ஏதும் இல்லை. மன்னிக்கவும். இவ்வாறு கூறியிருக்கிறார்.
ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
SHARE