தவறு யார் மீது? வங்கதேச வீரர்களுக்கு செக் வைத்த ஐசிசி

148

625-500-560-350-160-300-053-800-748-160-70-9

மிர்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் வங்கதேச அணி தோல்விஅடைந்ததால், இரண்டாவது போட்டியில் வங்கதேச வீரர்கள் சற்று ஆக்ரோசத்துடன் விளையாடினர். இதனால் வங்கதேச அணி இப்போட்டியில் வெற்றி பெற்றது.

ஆனால் வங்கதேச அணியின் வெற்றிக்கு சற்று இடையூறு கொடுத்த இங்கிலாந்து வீரர் பட்லர் அவுட்டானவுடன், வங்கதேச வீரர்கள் அவரை வெளியே போ என்று கிண்டல் அடித்தனர். இதனால் மைதானத்தில் வாக்குவாதம் நடைபெற்றது, இது போட்டி முடிந்தும் தொடர்ந்தது.

இது தொடர்பாக அப்போட்டியின் வீடியோவை ஐசிசி ஆராய்ந்து பார்க்கையில் வங்கதேச வீரர்கள் மீதே தவறு உள்ளது என நிரூபணமானது.

இதனால் வங்கதேச அணியை வழி நடத்திச் செல்லும் தலைவர் மூர்தசாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்ததோடு மட்டுமில்லாமல் 20 சதவீதம் அபராதமும் விதித்தது.

இதுகுறித்து ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்லர் விக்கெட் விஷயத்தில், வங்கதேச அணி வீரர்களே எல்லை மீறி நடந்து கொண்டுள்ளனர், இது கடுமையாக கண்டிக்கதக்கது.

மைதானத்தில் சரியான முறையில் வீரர்கள் நடந்து கொள்வது அவசியம். அதைத்தவிர்த்து நன்மதிப்பை சிதைக்கும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது.

அதையும் மீறி நடந்தால் தண்டனை வேறு விதமாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE