தஹம் சிறிசேனவுக்கு சொந்தமான BMW i8 கார் விவகாரம்…? திடுக்கிடும் உண்மைகள்….

286

ஜனாதிபதியின் புதல்வர் தஹம் சிறிசேனவினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ரக அதி சொகுசு BMW i8 வாகனம் தொடர்பாக தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் பெறுமதி 21,496,25000 ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த BMW i8 வாகனத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்த திம்பிரிகஸ்யாய சுனில் மோட்டர்ஸ் நிறுவனம் இந்த வாகனத்தை விற்பனை செய்வதற்காக இறக்குமதி செய்ததாகவும், அதனை பராமரிப்பு (Service) பணிகளுக்காக அனுப்பப்பட்ட இடத்தில் வேறு நபர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பயன்படுத்தி தஹம் சிறிசேனவுக்குச் சொந்தமானது என இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த செய்தியில் எந்தவிதமான உண்மைத்தன்மையும் இல்லை என தாம் அறிவிப்பதாக திம்பிரிகஸ்யாய சுனில் மோட்டர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.bmw_carbmw_car01

SHARE