தாங்க முடியாத முதுகு வலியா? இதோ உடனடி விடுதலை

179

முதுகு வலி வருவதற்கு நாள் முழுவதும் தவறான நிலையில் இருப்பது தான் காரணம். இந்த முதுகு வலியில் இருந்து விடுபட பல மருத்துவ சிகிச்சைகள் உள்ளன.

அதே சமயம் இயற்கை வழிகளும் உள்ளன. சொல்லப்போனால், முதுகு மற்றும் உடல் வலிகளுக்கு இயற்கை வழிகளைப் பின்பற்றினால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைப்பதோடு, தசைகளில் உள்ள காயங்களும் குணமாகும்.

இங்கு முதுகு வலியில் இருந்து உடனடி விடுதலை அளிக்கும் ஓர் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெயில் மற்ற எண்ணெய்களை விட அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வலி நிவாரணி பண்புகள் ஏராளமான அளவில் உள்ளது.

இந்த லாவெண்டர் எண்ணெயை இடுப்பு மற்றும் முதுகு வலிகளுக்குப் பயன்படுத்தினால், அது தசைகளில் உள்ள காயங்களை விரைவில் சரிசெய்து, வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

இடுப்பு மற்றும் முதுகு வலி கடுமையாக இருந்தால், லாவெண்டர் எண்ணெய்யை அப்பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

இந்த எண்ணெயைக் கொண்டு ஒரு நாளைக்கு 3 முறை மசாஜ் செய்து வந்தால், முதுகு வலி குறைந்திருப்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள்.

குறிப்பு லாவெண்டர் எண்ணெய் முதுகு வலிகளுக்கு மட்டுமின்றி, உடலின் இதர பகுதிகளில் ஏற்படும் வலிகளுக்கும் நல்ல தீர்வை வழங்கும்.

SHARE