தாங்க முடியாத வறட்டு இருமலுக்கு உடனடி நிவாரணம் இதோ!

153

சளி இருந்தாலே காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை புண் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

இது போன்ற பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்த இயற்கையில் உள்ள சில சூப்பரான வழிகள் இதோ…

  • பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அதனுடைய தெளிந்த நீரை மட்டும் எடுத்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
  • பலாப்பழத்தை தேனில் நனைத்துச் சாப்பிட்டாலும் அல்லது வெந்நீரில் தேன் கலந்து குடித்து வந்தாலும் ஜலதோஷம் மற்றும் நுரையீரலில் தேங்கும் சளிப் பிரச்சனைகள் நீங்கிவிடும்.
  • குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் பிரச்சனைக்கு மூன்று சொட்டு இஞ்சிச்சாறு மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், குணமாகும்.
  • தாங்க முடியாத இருமல் பிரச்சனைகளுக்கு முருங்கைக் கீரையை சிறிது உப்பு சேர்த்து உள்ளங்கையில் வைத்து கசக்கி, அதனுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
  • துளசிச் சாறு மற்றும் கல்கண்டையும் ஒன்றாக சேர்த்து சர்பத் போலக் காய்ச்சி அதில் சிறிதளவு எடுத்து 3 முறைகள் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
SHARE