தாஜூடீனின் படுகொலை குறித்து முஜிபூர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை காரணமாக பாராளுமன்றத்தில் குழப்பம்

303

ரக்பி வீரர் வாசிம்தாஜூடீனின் படுகொலை குறித்து அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்,முஜிபூர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை காரணமாக பாராளுமன்றத்தில் இன்று பெரும் குழப்பமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபடும் நிலையும் உருவானது. நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தனது அறிக்கையை வாசித்துக்கொண்டிருந்தவேளை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், குறிப்பிட்ட விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து சபையில் கருத்து தெரிவிப்பதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ரக்பிவீரரை கொலைசெய்தவர்கள் பாராளுமன்றத்தில் கூக்குரல் எழுப்புகின்றனர் என முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

அவ்வேளை பாராளுமன்ற அமர்விற்கு தலைமைதாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் எட்வேர்ட் குணசேகர,நீதிமன்றம தொடர்பான எந்தவிவகாரங்கள் குறித்தும் உரையாற்றவேண்டாம் என குறிப்பிட்டார். எனினும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றிக்கொண்டிருந்தார்,அதனை தொடர்ந்து எதிர்கட்சியை சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை நோக்கி ஆத்திரத்துடன் விரைந்தனர். இதனை தொடர்ந்து பிரதியமைச்சர்கள் பலர் அவர்களை நோக்கி சென்று தடுத்தனர்.அதனை தொடர்ந்து பாராளுமன்றம் ஓத்திவைக்கப்பட்டது,

SHARE