தான் பதவியில் இருக்கும் நிலையில் இன்னொருவருக்கு நியமனம்! டாக்டர் திலங்க சமரசிங்க அதிருப்தி

275
தான் பதவியிலிருக்கும் போது அந்த பதவிக்கு வேரொருவரை நியமித்துள்ளதாக டாக்டர் திலங்க சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

தன்னை பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறித்த தனக்கு முன்னறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் டாக்டர் திலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு இன்று பிரத்தியேகமாக வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தன்னை பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளை பேணி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தன்னை பதவி நீக்கம் செய்வதில் பின்புலமாக செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சுயாதீன குழுக்கள் மற்றும் அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களை நியமிக்கவும் பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு காணப்படும் நிலையில் தன்னை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் எந்தவகையில் பயன்படுத்தப்பட்டது எனப்து கேள்விக்குறிகாகவே உள்ளது என்று அவர் தெரிவித்தார்

SHARE