
இது சத்து மிகுந்தது. மாவுச் சத்து, புரதம், கனிமம் ஆகியவற்றோடு சில வேதிப் பொருட்களும் உள்ளன. நீருக்கடியில் வளர்வதால் இது குளிர்ச்சியானது. தாமரைத் தண்டை உண்டதும் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பம் குறைவதாக சீன மூலிகை மருத்துவம் கூறுகின்றது. மேலும் தாகமும் தணிகிறது. மது குடித்த பின் வாயில் ஏற்படக் கூடிய கசப்பையும் ரத்தவாந்தியையும் தாமரைத் தண்டு கட்டுப்படுத்துகின்றது.
பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் குளிர்ச்சியாக சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் தாமரை தண்டு மட்டும் விதிவிலக்கு. இது குழந்தை பெற்ற பிறகு தாயின் வயிற்றில் தங்கிவிட்ட கசடுகளை வெளியேற்றுகின்றது. ஆகவே பச்சை தாமரைத் தண்டை மருந்து என்பார்கள். குறிப்பாக பெண்கள் தாமரைத் தண்டின் கணுக்களை தின்பது நல்லது.
ஏனென்றால் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை இது கட்டுப்படுத்துகின்றது. மேலும் சிறு நீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும் ரத்த வாந்தியும் நிறுத்துவதற்கு தாமரைக் தண்டின் கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து முதல் மருந்தாக சீன மூலிகை மருத்துவர்கள் தருகின்றனர்.