தாயகம் திரும்ப ஆர்வம் காட்டும் அகதிகள் – காரணம் என்ன..?

197

625-256-560-350-160-300-053-800-461-160-90-1

இந்தியாவில் இருக்கும் 70 வீதமான இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் ஸ்தாபகர் சந்திரஹாசன் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற அசாதாரண நிலை காரணமாக கடந்த மூன்ற தசாப்த காலமாக இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு வாழ்ந்து வரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் சுமார் 70000 பேர் வரை தாயகம் திரும்ப விரும்பம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கை அகதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் இந்த தகவல் வெளியிடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் வாழும் சுமார் 35000 பேர் தனியாக அல்லது உறவினர்களுடன் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ளது. இந்நிலையில், வடக்கு கிழக்கில் இயல்பு நிலையைக் ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி மற்றும் பிராதமர் புலம்பெயர் மக்களை நாடு திரும்புமாறு கோரியுள்ள நிலையில் இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயியும், தாயகம் திரும்ப விரும்பம் தெரிவிக்கும் வறிய அகதிகளுக்கு இரு நாடுகளும் இணைந்து நிதி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE