
தாய்லாந்தில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
தாய்லாந்தின் சுற்றுலா நகரங்களில் இவ்வாறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவங்களில் குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்து மக்கள் நீண்ட விடுமுறை கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.