தாய்லாந்தில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்! என்ன காரணம் தெரியுமா?

191

 

கஞ்சாவுக்கு உலக அளவில் இருக்கும் பிரம்மாண்டமான தேவைகளை பணமாக்க முயற்சிக்கும் தாய்லாந்தில் உள்ள தொழில் முனைவோர்.

தாய்லாந்தில் மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கியதன் விளைவாக அந்த நாட்டின் சுற்றுலாவில் மிகப் பெரிய அளவில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைக் கொண்டாடும் பல நிகழ்வுகள் தாய்லாந்தில் களைகட்டியுள்ளன. உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் களிப்புடன் தாய்லாந்திற்கு வருகை தருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவில் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு தாய்லாந்து ஆகும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக மரிஜூவானாவை மருத்துவ பயன்பாட்டிற்காக சட்டபூர்வம் ஆக்கிய தாய்லாந்து, இந்த ஆண்டு, அதை பயிரிடுவது மற்றும் பிரித்தெடுத்தலுக்கு இருந்த தடையை நீக்கியது.

மேலும், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவும் மருஜூவானாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது உல்லாச பிரியர்களுக்கு கொண்டாட்டமான செய்தியாகிவிட்டது.

சுற்றுலாவுக்காக தாய்லாந்துக்கு சர்வதேச நாடுகளில் இருந்து மக்கள் வருவதால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலா மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.

2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்கு வருகை தந்துள்ளனர்.

அதாவது, கஞ்சா தொடர்பான தாய்லாந்தின் கொள்கையின் தாக்கம் அந்நாட்டின் சுற்றுலாத்துறையில் உடனடியாக எதிரொலித்தது. தாய்லாந்தில் சுற்றுலாத்துறையின் மதிப்பு$52.63 பில்லியன் என்ற அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பயன்பாட்டிற்காக மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான மிகப்பெரிய ஆதரவு கொடுத்த தாய்லாந்து நாட்டின் சுகாதார அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல், ஐந்து ஆண்டுகளில் சந்தை $ 3 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளார்.

SHARE